Sunday 29 May 2011

மனித கடவுள்கள்

என் முதல் பதிவு. எதாச்சும் பிழைகள் இருந்தால் மனிக்கவும். 


எப்பொழுதுமே நாம் கடவுளுக்கு அப்புறம் வணங்கும் மனிதன் மருத்துவர்.கஷ்டம் வரும் போது  தான் மனிதர்கள் எல்லோரும் கடவுளை வணங்குவார்கள். அதே மாதிரி தான் மருத்துவரையும். நம் உடலில் நோய் வந்து தொற்றிக்கொள்ளும் பொழுது மனிதன் கை எடுத்து கும்பிடும் ஒரே தெய்வம் மருத்துவர்தான்.இதை வைத்து தான் அவர்கள் பொழப்பும் நடக்கிறது 

ஒரு நாட்டின் ரெண்டு முக்கியமான தேவைகள்..!இது நாட்டின் இரு கண்கள் என்று கூறினால் மிகை ஆகாது ஒன்று கல்வி மற்றொன்று சுகாதாரம் .இந்த ரெண்டும் நம் நாட்டில் சுத்தமாக இல்லை.ஒரு சராசரி இந்திய குடிமகன் 20 அல்லது 25 ஆண்டுகள் வேலை செய்து தான் சேமித்து வைக்கும் பணமெல்லாம் என்று அவன் வயது முதிர்ந்த காலம் வருகிறதோ அன்றோடு அவன் சேமிப்பு பணம் எல்லாம் காலி ஆகிவிடுகிறது.இது அரசு மருத்தவமனையும் சரி தனியார் மருத்துவமனைகளும் சரி ஒரே நிலை பாட்டில் தான் இருக்கிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர்கள் 95% பேர் தனியார் மருத்துவமனையோ அல்லது வேறு மருத்துவமனையிலோ வேலை பார்க்கின்றனர் .இவர்கள் தனியார் மருத்துவமனை வைத்தோ அல்லது வேலை பார்த்தோ நல்லா சம்பாதிக்கட்டும் . ஆனால் அரசு மருத்துவமனைக்கு வரும் பாவப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்கலாமே!!!!

தனியார் மருத்துவமனை அடிக்கும் கொள்ளை கொஞ்சம் இல்லை.இருக்குற துணிமணிகளை எல்லாம்  உருவிகிட்டு தான் அனுப்புறாங்க. முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவ மனைகளில் எப்பாவது சிசெரியேன் மூலம் பிரசவம் இருக்கும். மத்த படி எல்லாம் சுக பிரசவம் தான்.ஆனால் இப்பொழுது நேர் எதிர் மறை யாக தான் நடக்கிறது . எனக்கு தெரிந்து இப்போது சுக பிரசவேமே கிடையாது. 

அரசு மருத்துவமனையில்  வேலை பார்க்கும் மருத்துவர் நாம் அரசு மருத்துவமனை சென்றால் சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல என்னோட கிளினிக் வாங்கன்னு சொல்லுறாரு.இங்க எந்த சாதன வசதியும் இல்ல நீங்க எங்க மருத்துவமனைக்கு வாங்க ன்னு சொல்லி அங்கேயும் காசு பார்க்கிறாங்க இந்த மனித கடவுள்கள்.

ஏதாவது ஒரு காரணம் சொல்லி அறுவை சிகிச்சை செய்து விடுறாங்க .எல்லாம் எதற்க்காக பணத்திற்காக தான் என்றே எண்ணுகிறேன். இப்ப வந்த சிக்குன் குனியா காய்ச்சலுக்கு கூட கலர் கலராக மாத்திரை தந்து ஏமாற்றிய மருத்துவர்கள் நிறைய உண்டு.அரசிடம் விளக்கம் கேட்டால் paracitamol தவிர வேறு மாத்திரைகள் கிடையாது என்று சொல்கிறார்கள்.

மருத்துவமனை சென்றால் அதே paracitomal கூட antibiotic மாத்திரைகள் தந்து ஆயிரம் ரூபாய் பிடுங்கிவிட்டார்கள்.எல்லா அரசுகளும் இந்த இலவசம் கொடுக்குரதுக்கு பதிலா நல்ல சுகாதராமான மருத்துவமனைகள் மாவட்டம் முழுவது ம் கட்டி கொடுக்கலாமே.

புது அரசாங்கம் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? ரமணா படத்தில் வர்ற மாதிரி ஏதாச்சும் மாற்றம் வருமா என்ற ஏக்கத்தில் உங்களில் ஒருத்தி..